The Family Plan
டேன் மார்கன் பல முகங்களைக் கொண்டவர்: ஒரு அக்கறையுள்ள கணவர், அன்பான தந்தை, ஒரு வெற்றிகரமான கார் விற்பனையாளர். அவர் ஒரு முன்னாள் கூலிப்படைக் கொலையாளியும்கூட. அவருடைய கடந்த காலத்தின் நிழல், நிகழ்காலத்தை தாக்கும்போது, அதைப் பற்றி எதுவும் அறியாத அவருடையக் குடும்பத்தை, முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு ரோட் டிரிப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது.