Doug Unplugs
டக் என்பது ஒரு இளம் ரோபாட், தகவல்களைத் தாண்டி மற்ற விஷயங்களும் வாழ்க்கையில் உள்ளன என்று அது நினைக்கிறது. மற்ற ரோபாட்கள் தங்களின் தினசரி நடவடிக்கைகளைப் பதிவிறக்கம் செய்வதற்காகத் தங்களை மின் அடைப்பான் மூலம் இணைத்துக்கொள்ளும் போது, டக் தன்னை இணைத்துக் கொள்ளாமல், மனித உலகின் அதிசயங்களை நேரில் ஆராய்ந்து அனுபவிப்பதற்காகத் தன் தோழி எம்மாவுடன் பயணிக்கிறது.