டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.1, எபி.18
பழைய தீபம், புதிய திரியுடன்
பல வருடங்களுக்கு முன், தங்கள் உறவை முறித்து சார்லியின் மனதை உடைத்த அவனுடைய பழைய காதலியைச் சந்திக்க சார்லி ஒத்துக்கொள்கிறான். ஆனால், அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது, அவள் இப்பொழுது ஒரு ஆணாக மாறியிருக்கிறாள் மற்றும் அந்த ஆண், பில் (க்ரிஸ் ஓ'டோன்னெல்) சார்லியின் நண்பனாக ஆசைப்படுகிறான். இந்தப் பாலின மாற்றத்தால் முதலில் கலக்கமடையும் சார்லி, பின்னர் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான்.