Preschool
லண்டனிலுள்ள உயர்தர மழலையர் பள்ளியில், மீதமுள்ள ஒரே இடத்திற்காக இரண்டு அப்பாக்கள் (ஜோஷ் டுஹாமெல் மற்றும் மைக்கேல் சோச்சா) போட்டியிடுகின்றனர். சாதாரண விண்ணப்பமாக தொடங்கி, வயிறு குலுங்கும் நகைச்சுவை, ஒருவரை ஒருவர் மிஞ்சத் துடிக்கும் செயல்கள், எதிர்பாராத திருப்பங்களோடு பெரிய மோதலாக மாறுகிறது. திட்டங்கள் கைமீறும்போது, குடும்பங்களும் களேபரத்திற்குள் இழுக்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகளுக்காக எதையும் செய்ய துணிவது பற்றியும், பெற்றோராக இருப்பதன் நிஜ அர்த்தத்தையும் அந்த இரண்டு அப்பாக்களும் உணர்கின்றனர்.
