Cherry
கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்ட செர்ரி (டாம் ஹாலண்ட்), தன்னுடைய காதலி எமிலி-யின் (சியாரா பிராவோ) உண்மையான காதலின் ஆதரவில்- ஈராக்கிற்கு இராணுவ மருத்துவ வல்லுநராக செல்கிறார். அதிர்ச்சிகர சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தப் போராட்டத்துடன் போரிலிருந்து வீட்டிற்கு அவர் திரும்பியப் பின்னர், அவருடைய வாழ்க்கை, போதை மருந்து, குற்றச் செயல்கள் என்கிற சுழலில் சிக்கிக் கொள்ள, உலகில் தனக்கான இடத்தைத் தேடி அவர் போராடுகிறார்.